நீலாயில் விபத்தை ஏற்படுத்தி 31 வயது இளம்பெண்ணுக்கு மரணம் விளைவித்த லாரி ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி!
- Thina S
- 29 Sep, 2024
நீலாய் Persiaran சாலையில் சமிஞ்சை விளக்கில் காத்திருந்த 5 வாகனங்களைக்
கனரக லாரி மோதியதில் 31 வயது இளம் பெண் உடல் நசுங்கி சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 30 வயது லாரி ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிரம்பான் MAJISTRET நீதிமன்றத்தில் Methaphetamine போதைப்பொருள் உட்கொண்டதை 30 வயது லாரி ஓட்டுநர் ஒப்புக் கொண்டதாக நீலாய்
மாவட்டக் காவல் உதவி ஆணையர் Mat Ghani Lateh தெரிவித்தார்.சுமார்
4 நாள்களாகத் தொடர்ந்து பயணத்தில் இருந்தததாகவும் அதனால் Methaphetamine எனும் போதைப்பொருளைத் தூக்கம் வராமல் இருக்க பயன்படுத்தியதாகவும் லாரி ஓட்டுநர்
. சிரம்பான் MAJISTRET நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். தாம் முதல் முறையாகப் போதைப்பொருள் உட்கொண்டதாகத்
தெரிவித்த லாரி ஓட்டுநர் மீது மேலதிக விசாரணையை நடத்த 4 நாள்கள் விசாரணைக் காவலை நீதிமன்றம்
நீட்டித்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *