HRD Corp விவகாரம்: பலரிடம் விசாரணை நடத்தப்படும்! MACC அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 10- மனிதவள மேம்பாட்டுக்‌ கழகமான HRD Corp நிறுவனத்தில் நிகழ்ந்ததாகக்‌ கூறப்படும்‌ நிதி முறைகேடுகள்‌ தொடர்பில்‌ பலரிடம்‌ விசாரணை நடத்தப்படும்‌ என்று மலேசிய லஞ்சஊழல்‌ ஒழிப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி-யின் மூத்த புலனாய்வு இயக்குநர்‌ டத்தோஸ்ரீ ஹிஷாமுடின்‌ ஹஷிம்‌ நேற்று தெரிவித்தார்‌.       

இதுவரை எவருக்கும்‌ நாங்கள்‌ அழைப்பாணை கொடுக்கவில்லை. ஆனாலும்‌, கூடிய விரைவில்‌ பலரிடம்‌ விசாரணை நடத்தப்படும்‌ சாத்தியத்தை நாங்கள்‌ மறுக்கவில்லை என்று அவர்‌ குறிப்பிட்டார்‌. 

எச்ஆர்டி கோர்ப்‌ மீது தாங்கள்‌ நடத்திவரும்‌  விசாரணை தொடர்பில்‌ முக்கிய ஆவணங்களைப்‌ பெறுவதற்காக மனிதவள அமைச்சுக்கும்‌ எச்‌ஆர்டி கோர்ப்‌ நிறுவனத்திற்கும்‌ எம்‌ஏசிசி அதிகாரிகள்‌ நேற்று சென்றிருந்தனர்‌. ஆவணங்களைக்‌ கைப்பற்றும்‌ நோக்கத்தில்தான்‌ எம்‌ஏசிசி அதிகாரிகள்‌ அங்கு சோதனையிட்டனர்‌ என்பதை ஹிஷாமுடின்‌ பின்னர்‌ உறுதிப்படுத்தினார்‌. 

லஞ்சஊழல்‌, அதிகாரத்‌ துஷ்பிரயோகம்‌, நிதிமுறைகேடு போன்றவற்றை மையமாக வைத்து எம்‌ஏசிசி விசாரணை நடத்திவருகிறது என்றும்‌ அவர்‌ குறிப்பிட்டார்‌.  நேற்றுமுற்பகல்‌ 11.2௦மணியளவில்‌  மனிதவள அமைச்சுக்குச்‌ சென்ற எம்‌ஏசிசி புலன்விசாரணை அதிகாரிகள்‌ சுமார்‌ ஒரு மணிநேரத்திற்குப்‌ பின்னர்‌ அங்கிருந்து வெளியேறினர்‌.  புக்கிட்‌ டாமன்சாராவில்‌ உள்ள எச்‌ஆர்டி கோர்ப்‌ தலைமையகத்திலும்‌ எம்‌ஏசிசி புலன்விசாரணையாளர்கள்‌ இரண்டு குழுக்களாகச்‌ சென்று சோதனையில்‌ ஈடுபட்டனர்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *