பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களின் வழி RM 77.58 பில்லியன் மதிப்பிலான முதலீடுகள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 11: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் 19 நாடுகளுக்கான அரசுமுறை பயணம்  ஜனவரி முதல் மே 2024 வரை RM77.58 பில்லியன் முதலீட்டு மதிப்புகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக கூட்டரசுப் பிரதேச பிரதமர்துறை அமைச்சர்  டாக்டர் ஸலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நவம்பர் 2022 முதல் மே 2024 வரை 19 நாடுகளுக்கு 31 அரசுமுறைப் பயணத்தில் பிரதமர் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

சவூதி அரேபியா, அவுஸ்திரேலியா, புருனே தருஸ்ஸலாம், ஐக்கிய அரபு அமீரகம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், ஜெர்மனி, கஜகஸ்தான், கம்போடியா, எகிப்து, லாவோஸ், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, துருக்கி, உஸ்பெகிஸ்தான், வியட்நாம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மற்றும் அவரது தூதுக்குழு பயணம் செய்துள்ளதாக அவர் கூறினார்..

பிரதமரின் இந்தப் பயணத்தின் வழி 2023 இல் RM353.6 பில்லியன் மற்றும் ஜனவரி முதல் மே 2024 வரை RM77.58 பில்லியன் முதலீட்டு மதிப்புகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளன" என்று பெரிக்காத்தான் நேஷனல் பெர்மாத்தாங் பாவ்  நாடாளுமன்ற உறுப்பினர்  முஹம்மது ஃபவ்வாஸ் முகமட் ஜான் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

2022 முதல் தற்போது வரை பிரதமரின் உத்தியோகபூர்வ அல்லது அதிகாரப்பூர்வமற்ற வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிடுமாறு முஹம்மது ஃபவாஸ் அரசாங்கத்திடம் கேட்டிருந்தார்.

இந்த ஒவ்வொரு வருகையின் விளைவாக நாட்டிற்கு வெற்றிகரமாக கொண்டு வரப்பட்ட முதலீட்டின் அளவை அவர்  அறிய விரும்பினார்.

வெளிப்படையான மற்றும் திறந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நாடாக மலேசியாவை நிலைநிறுத்துவது, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் மேம்படுத்துவதும் இத்தகைய வருகைகளின் நோக்கம் என்று ஸலிஹா குறிப்பிட்டார்.

எடுத்துக்காட்டாக, மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு, இப்போது 50 ஆண்டுகளை எட்டியுள்ளது.

 பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மற்றும் பல்வேறு பொருளாதாரத் துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது நாட்டின் பொருளாதாரத்தில் நேர்மறையான விளைவுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். என்று அமைச்சர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *