இரவு 10 மணிக்கு அனைத்து போலீஸ் நிலையங்களின் வெளி நுழைவாயில்கள் மூடப்படும்! - உள்துறை அமைச்சு அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

இரவு 10 மணிக்குப்‌ பிறகு வெளி நுழைவாயில்களை மூடுமாறு போலீஸ்‌ நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டூள்ளது. மக்கள்‌ புகார்‌ அளிக்கும்‌ போலீஸ்‌ நிலையங்களை நாம்‌ சமநிலைப்படுத்த வேண்டும்‌. அதேவேளையில்‌, போலீஸ்‌ நிலையம்‌ மீது இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆதலால்‌, இந்த இரண்டையும்‌ நாங்கள்‌ சமநிலைப்படுத்துகின்றோம்‌.  “போலீசாருடன்‌ இருவர்‌ விவாதம்‌ புரிந்து கொண்டிருந்தபோது, அந்த தாக்குதல்‌ சம்பவம்‌ நடந்த, உலு திராம்‌ சம்பவம்‌ அதற்கு ஓர்‌ உதாரணமாகும்‌ என்று, கேள்வி நேரத்தின்போது சைஃபுடின்‌ தெரிவித்தார்‌.  அவ்வப்போது ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட, தங்களின்‌ மாவட்ட தலைமையகம்‌ மற்றும்‌ பெரிய போலீஸ்‌ நிலையங்களுக்கான தங்களின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக்குவதுடன்‌ மறுபரிசீலனை செய்யுமாறு, போலீசாருக்கு தெளிவான உத்தரவுகள்‌ பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும்‌ அவர்‌ கூறினார்‌. 

ஒவ்‌வொரு போலீஸ்‌ நிலையத்திலும்‌ தளவாட சூழ்நிலைமையின்‌ அடிப்படையில்‌, அது விளக்காகவோ வேலியாகவோ இருந்தாலும்‌, அது குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு நாங்கள்‌ உத்தரவு பிறப்பித்துள்ளோம்‌. அதன்‌ பின்னர்‌ அவற்றை மேம்படுத்துவதற்கான செயல்பாட்டு முறையை எங்களுக்கு ஏற்படுத்தித்‌ தரும்‌ என்று சைஃபுடின்‌ தெரிவித்தார்‌. 

கடந்த மே மாதம்‌ 17 ஆம்‌ தேதி, உலு திராம்‌ போலீஸ்‌ நிலையத்திற்குள்‌ நுழைந்த ஓர்‌ ஆடவன்‌ அங்கு தாக்குதல்‌ நடத்தியதில்‌, அஹ்மாட்‌ அஸா ஃபாமி அஸ்ஹார்‌ (வயது 22) மற்றும்‌ முஹ்மட்‌ ஷஃபிக்‌ அஹ்மாட்‌ சைட்‌ (வயது 24) ஆகிய இரண்டு போலீஸ்‌ கான்ஸ்டபிள்கள்‌ கொல்லப்பட்டதுடன்‌, அச்சம்பவத்தின்போது துப்பாக்கி குண்டு பட்டு கோப்பரல்‌ முஹ்மட்‌ ஹசிப்‌ ஷாஸ்லான்‌ (வது 38) காயமடைந்தார்‌.  அந்த ஆடவன்‌ ஜெமாஹா இஸ்லாமியா கும்பலின்‌ உறுப்பினர்‌ என்று தொடக்கத்தில்‌ போலீசார்‌ கூறியிருந்தனர்‌.  ஆனால்‌, மேல்‌ விசாரணைக்குப்‌ பின்னர்‌, அச்சம்பவத்தில்‌ மரணமடைந்த அவ்வாடவனுக்கும்‌ தென்‌ கிழக்கு ஆசிய பயங்கரவாதக்‌ கும்பலான ஜெமாஹா இஸ்லாமியாவுக்கும்‌ தொடர்பு இல்லை என்று போலீசார்‌ தெளிவுபடுத்தினர்‌.  உலு திராம்‌ போலீஸ்‌ நிலையம்‌ தாக்கப்பட்டதைத்‌ தொடர்ந்து நாடு முழுமையிலும்‌ உள்ள போலீஸ்‌ நிலையங்கள்‌ விழிப்பு நிலையில்‌ வைக்கப்பட்டுள்ளன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *