HRD Corp தணிக்கை தொடர்பாக மூன்றாவது தரப்பும் ஆய்வு செய்யும்! மனிதவள அமைச்சு அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11: மனிதவள மேம்பாட்டுக் கழகத்தில் (HRD Corp) சுதந்திரமான தணிக்கையை மேற்கொள்ள மனிதவள அமைச்சு மூன்றாம் தரப்பை நியமிக்கும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ஆடிட்டர் ஜெனரல் மற்றும் பொதுக் கணக்குக் குழு (பிஏசி) அறிக்கைகளில் எழுப்பப்பட்ட அனைத்து செயல்முறைகள், ஆவணங்கள் மற்றும் சட்டங்களுக்கு இணங்குதல் மற்றும் வழிகாட்டுதல்களை ஆய்வு செய்ய அமைச்சு இம்மாத இறுதிக்குள் ஒரு தணிக்கையாளரை நியமிக்கும் என்று அவர் கூறினார்.

ஆடிட்டரை நியமிப்பதற்கான செயல்முறை நடந்து வருகிறது. தணிக்கை மற்றும் அறிக்கை வெளியிடுவதற்கான காலம் நியமனத்திற்குப் பிறகு தீர்மானிக்கப்படும் என்று நேற்று ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மற்றும் பிற தொடர்புடைய தரப்பினரால் நடத்தப்படும் விசாரணைகளுடன், இந்தத் தணிக்கையும் ஒரே நேரத்தில் இருக்கும் என்று அவர் கூறினார்.

அனைத்து HRD Corp அதிகாரிகளும் விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

விசாரணைகளை எளிதாக்குவதற்கும், MACC மற்றும் சுயாதீன தணிக்கையின் அறிக்கைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மதிப்பாய்வு செய்வதற்கும் ஒரு சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *