விடுமுறை கால போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜூன் 9 ஆம் தேதி வரை ‘ஓப் லஞ்சார்’!

- Muthu Kumar
- 07 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 7:
ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை காலத்தில் சாலையில் பயணிப்பவர்களின் பாதுகாப்பையும் சாலைகளில் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்வதற்காக அரச மலேசிய போலீஸ்படை நேற்று முதல் திங்கள்கிழமை ஜூன் 9 ஆம் தேதி வரை ‘ஓப் லஞ்சார்’ சாலை பாதுகாப்பு நடவடிக்கையை அமலாக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும்போது நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களில் 1,858 காவல்துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்று புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகள், கூட்டரசு சாலைகள், மாநில சாலைகள் மற்றும் நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அனைத்து காவல்துறை இயந்திரங்களும் விரிவாகவும் முறையாகவும் ஒன்று திரட்டப்படும் என்று அவர் கூறினார்.
பொதுமக்கள் சாலை விதிகளுக்குக் கீழ்ப்படிந்து இருக்கும்படி முகமட் யூஸ்ரி வேண்டுகோள் விடுத்தார்.
விபத்துக்கு வழிவகுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
Hari Raya Haji, polis Malaysia melaksanakan operasi keselamatan jalan raya ‘Op Lenjar’ dari 7 hingga 9 Jun untuk memastikan keselamatan dan kelancaran trafik. Seramai 1,858 anggota polis akan dikerahkan di jalan utama bagi mengurangkan kesesakan. Orang ramai diminta mematuhi undang-undang jalan raya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *