சபாநாயகர் அரசியல் அமைப்பைக் களங்கப்படுத்திவிட்டார்! - 6 MP-க்கள் தற்காக்கப்பட்டது குறித்து முகைதீன் சீற்றம்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 10:  பெர்சாத்து கட்சியின் உறுப்பினர்களாக இருந்து அன்வாருக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் விலகிய 6 எம்.பி.க்களின் இருக்கைகளை காலி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல் முடிவு செய்துள்ளதாக பெர்சாத்து கட்சியின் தலைவரும், பெரிகாத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன் யாசின் உறுதிப்படுத்தியுள்ளார்.

சபாநாயகரின் இந்த  முடிவு ஏமாற்றமளிப்பதாகக் கூறிய அவர், இது கூட்டாட்சி அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டங்களை நிலைநிறுத்துவதாகவும், பாதுகாப்பதாகவும் அவர் சத்தியம் செய்த போதிலும், இந்த முடிவின் மூலம் அவர் அரசியலமைப்பைக் களங்கப்படுத்திவிட்டார் என்று முகைதீன் சுட்டிக்காட்டினார்..

 உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் இனி அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக இல்லாவிட்டால் எம்.பி.க்களின் இடங்கள் காலி செய்யப்பட வேண்டும் என்று சட்ட விதி கூறுகிறது. 

எனவே, பெர்சாத்துவின் அரசியலமைப்பின் விதிகளைப் பின்பற்றி, ஆறு எம்.பி.க்களும் பெர்சாத்துவின் உறுப்பினர்களாக இல்லை என்பது தெளிவாகிறது என்று அவர் கூறினார்.

சபாநாயகர் ஜொஹாரியின் முடிவு சட்ட விதிகளுக்கு எதிராகவும், சபாநாயகராக அவரது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாகவும் இருப்பதாக முகைதீ ன் கூறினார். எனவே இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று முகைதீன் கூறினார்,

முன்னதாக சபாநாயகர் ஜோஹாரி அப்துல் எடுத்த முடிவு பெர்சாத்துவின் தலைமைக் கொறடா ரொனால்ட் கியாண்டிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நாடாளுமன்றத்தின் ஸ்திரத்தன்மையைக் காக்க, ஆறு எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளைக் காலி செய்வதை எதிர்த்து ஜோஹாரி முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *