RM10,000 லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிக்கு 20 மாதங்கள் சிறை!

- Sangeetha K Loganathan
- 30 May, 2025
மே 30,
கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரியப் பணியாற்றிய 44 வயது அதிகாரி 5 ஆண்டுகளுக்கு முன்னதாக RM10,000 லஞ்சம் பெற்றது நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 20 மாதங்கள் சிறை தண்டனை விதித்து Sesyen நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2021 மே 23 முதல் இந்த வழக்கு நடத்தப்பட்டு வருவதால் இன்று Sesyen நீதிமன்றம் மேலதிக விசாரணையை மறுத்து தீர்ப்பளித்துள்ளது.
கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தில் பணியில் இருந்த போது முகிய நிறுவனத்திடமிருந்து சுமார் RM10,000 லஞ்சம் பெற்று ஆவணங்களைப் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. கைது செய்யப்பட்ட 44 வயது Mohd Zulfadli Nayan கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதுடன் மேலதிகமாக ஓய்வூதியம் பெறும் தகுதியையும் இழப்பதாக Sesyen நீதிமன்ற நீதிபதி Datuk Ahmad Kamal Arifin Ismail உத்தரவிட்டார்.
Bekas pegawai Agensi Penguatkuasaan Maritim Malaysia dihukum penjara 20 bulan oleh Mahkamah Sesyen selepas didapati bersalah menerima rasuah RM10,000 daripada syarikat perkapalan lima tahun lalu. Beliau turut dilucutkan jawatan dan kelayakan pencen.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *