உயர்கல்வி அமைச்சில் போலி குத்தகை! RM137,200 இழந்த நிறுவன முதலாளி!

top-news

ஜூன் 2,

பல்கலைக்கழகங்களுக்கான மின்சாரக் குத்தகை வழங்குவதாகப் போலி குத்தகை விண்ணப்பத்தில் RM137,200 பணத்தை 52 வயது உள்ளூர் நிறுவன முதலாளி இழந்துள்ளார். உயர்கல்வி அமைச்சுடன் தொடர்புடைய குத்தகை என புலனத்தின் மூலமாகப் பெறப்பட்ட விளம்பரத்தை நம்பி RM137,200 பணத்தைக் குத்தகைக்கான முன் பணமாகப் பாதிக்கப்பட்ட 52 வயது நிறுவன உரிமையாளர் செலுத்தியதாகக் கெமாமன் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Razi Rosli தெரிவித்தார்.

மே 27 முதல் நேற்று வரையில் 7 பரிவர்த்தனைகளின் மூலம் ஒரே வங்கிக் கணக்கிற்குப் பணத்தைச் செலுத்தியதும் பாதிக்கப்பட்டவர் கிளந்தானில் உள்ள பல்கலைக்கழகத்திற்குத் தொடர்புக் கொண்ட போது அப்படியான எந்தவொரு குத்தகையும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டதாகவும் பணம் பெறப்பட்ட சம்மந்தப்பட்ட போலி புலனக் கணக்குகளையும் வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருப்பதாகக் கெமாமன் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Razi Rosli தெரிவித்தார்.

Seorang usahawan tempatan berusia 52 tahun kerugian RM137,200 selepas diperdaya melalui tawaran palsu sewaan elektrik universiti yang dikatakan melibatkan Kementerian Pengajian Tinggi. Mangsa hanya menyedari penipuan setelah menghubungi universiti terbabit.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *