போலி மிரட்டலுக்குப் பயந்து RM108,520 இழந்துள்ள பெண்!

- Sangeetha K Loganathan
- 02 Jun, 2025
ஜூன் 2,
தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC அதிகாரி என மிரட்டிய ஆடவரிடம் RM108,520 பணத்தை 58 வயது ஓய்வுப் பெற்ற ஊழியர் ஏமாந்துள்ளார். பாதிக்கப்பட்ட 58 வயது உள்ளூர் பெண் TANGKAK மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib தெரிவித்தார். கடந்த மே 9 ஆம் நாள் அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அழைப்பைப் பெற்றதாகவும் ஆன்லைன் மோசடியில் தாம் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் ஆன்லைன் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் மிரட்டல் விடுத்ததாகப் பாதிகப்பட்ட 58 வயது பெண் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணும் உண்மையில் MCMC அதிகாரிதான் பேசுவதாக நம்பி தனது சேமிப்புப் பணமான RM108,520 பணத்தை 2 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 16 பரிவர்த்தனைகள் மூலமாகப் பணத்தைச் செலுத்தியதாகவும் விசாரணைக்குப் பின்னர் சம்மந்தப்பட்ட பணத்தைத் திரும்பி தருவதாக வாக்குறுதியளித்தும் இதுவரையில் எந்தவொரு பணமும் தாம் பெறவில்லை என் பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC எந்தவோர் இடைத்தரகர்களும் இல்லை என்றும் சந்தேகநபர்களிடமிருந்து பணங்களைப் பெறுவதில்லை என விளக்கமளித்துள்ளது.
Seorang wanita tempatan berusia 58 tahun di Tangkak kerugian RM108,520 selepas diperdaya individu menyamar sebagai pegawai MCMC. Mangsa memindahkan wang ke dua akaun bank atas alasan siasatan kes penipuan dalam talian yang tidak wujud.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *