மோட்டார் சைக்கிளை மோதிய கார்! ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 31 May, 2025
மே 31,
ஜொகூரிலிருந்து மெர்சிங் செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பலியானதுடன் வாகனமோட்டி படுகாயம் அடைந்தார். விபத்துக் குறித்தானத் தகவல் நேற்றிரவு 11 மணிக்குக் கிடைக்க பெற்றதும் சம்வப இடத்திற்கு விரைந்ததாக Kota Tinggi மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார்.
விபத்து ஏற்பட்டதற்கானக் காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி 32 வயது உள்ளூர் ஆடவர் என்றும் படுகாயம் அடைந்த Proton Wira வாகனமோட்டி 31 வயது உள்ளூர் ஆடவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Kota Tinggi மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார். படுகாயம் அடைந்த வாகனமோட்டி Kota Tinggi மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையைத் தொடர்வதாகவும் Kota Tinggi மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார்.
Seorang penunggang motosikal maut manakala pemandu kereta cedera parah dalam kemalangan di Jalan Johor-Mersing. Insiden berlaku pada waktu malam dan siasatan awal mengesahkan mangsa berusia 32 tahun meninggal di lokasi kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *