ஓப்ஸ் கெம்பூர் சாசார்-60 அந்நியர்கள் கைது!

- Muthu Kumar
- 08 May, 2025
கோலாலம்பூர், மே 8-
குடிநுழைவுத் துறை அமலாக்கத் தரப்பினர் கைது செய்வதைத் தவிர்க்க கூரை மீது ஏறி 4 மீட்டர் உயரத்திலிருக்கும் சுவரிலிருந்து ஓர் இந்தோனேசிய ஆடவர் கீழே குதித்து விட்டார். சட்டவிரோதக் குடியேறிகளில் சிலர் ஒளிந்து கொண்டது மட்டுமின்றி சிகாம்புட், ஜாலான் கூச்சிங்கிற்கு அருகிலுள்ள கட்டுமான நிலத்தில் குதித்து விட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வான் முகமட் சௌபி வான் யூசோப் தெரிவித்தார்.
இச்செயல் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையின் அதிகாரிகள், உறுப்பினர்கள் ஓப்ஸ் கெம்பூர் சாசார் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது நிகழ்ந்தது. இது நாடு
முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரியளவிலான சோதனை நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகும். காலை 10.30 தொடங்கி நண்பகல் 12.00 மணி வரை 200 பேரிடம் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்கள் புரிந்த 60 அந்நியர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் 15 இந்தோனேசிய ஆடவர்கள். 2 பெண்கள், வங்காளதேச ஆடவர்கள் (41), மியன்மார் ஆடவர் (1), இந்திய ஆடவர் (1) ஆகியோர் அடங்குவர். 25 முதல் 50 வயதிற்குட்பட்ட இவர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக புக்கிட் ஜாலில் குடிநுழைவு முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஓர் அறிக்கையில் வான் முகமட் சௌபி வான் யூசோப் குறிப்பிட்டார்.
Seorang warga Indonesia cedera selepas terjun dari bumbung setinggi 4 meter untuk elak ditahan Jabatan Imigresen dalam serbuan di tapak binaan. Seramai 60 pendatang tanpa izin ditahan dalam operasi tersebut untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *