கம்போங் சுங்கை தெராப் பகுதியில் உரிமம் இல்லா இரு தொழிற்சாலைகளும் மூட உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

கோல சிலாங்கூர், செப்.29-

உரிமமின்றி வணிகம் செய்வதோடு அதிக இரைச்சலோடு மக்களுக்குத் தொல்லை கொடுத்து ரசாயன துர்நாற்றம் வீசி வரும் கம்போங் சுங்கை தெராப் சுற்றுப் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் 2 சட்டவிரோத மறுசுழற்சித் தொழிற்சாலைகள் இச்செயலை மேற்கொண்டு வருவதாக கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் அமலாக்கத் துறை இயக்குநர் முகமட் லுட்ஃபி மிஸ்லா ஹுடின் தெரிவித்தார்.

இவற்றின் செயல்பாடுகள் நகராண்மைக் கழகம் கடந்த வியாழக்கிழமை மேற்கொண்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைகளில் முடிவுற்றது.அனுமதியின்றிச் செயல்பட்டதோடு இதற்கு முன்பு நோட்டிஸ் வெளியிடப்பட்ட போதும் பிடிவாதமாகச் செயல்பட்டதால் பொதுமக்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் மேற்கொண்ட உளவுகளின் மூலம் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சோதனை நடவடிக்கையின் போது இரும்பு, உலர் பேட்டரி கழிவு, பிளாஸ்டிக் சர்க்யூட் போர்டு (plastic circuit board), செப்பு கழிவு ஆகியவற்றைச் சேமித்துச் செயல்முறைப்படுத்திக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவ்விரு தளங்களும் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டன. இதில் உற்பத்தி நடவடிக்கை உரிமம் இல்லாத இரு தொழிற்சாலைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

அதே சமயம் அங்கு 4 போர்க்லிஃப்ட்கள், மின்னியல் கழிவு கருவிகளும் கைப்பற்றப்பட்டன. இச்சம்பவம் 2007 வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிம விதிகள் கீழ் விசாரணை செய்யப்படுவதாகச் செய்தியாளர்களிடம் பேசிய போது முகமட் லுட்ஃபி மிஸ்லா ஹுடின் குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *