100 பள்ளிகளில் விஞ்ஞானிகளைக் கொண்டு வரும் திட்டம்! உடனடியாகச் செயல்படுத்தப்படும்! – கல்வி அமைச்சு உறுதி
- Shan Siva
- 18 Jul, 2024
கோலாலம்பூர், ஜூலை 18: STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில்
மாணவர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 100 பள்ளிகளில்
விஞ்ஞானிகளைக் கொண்டு வரும் திட்டம் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று கல்வி
அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகத்தின் (MOSTI) ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர்
கூறினார்.
உயர்கல்வி அமைச்சு மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சுடன், கல்வியமைச்சும் இணைந்து, பள்ளி மட்டத்தில் இருந்து உயர்கல்வி வரை STEM குறித்து கவனம் செலுத்தும் ஒரு சிறப்பு STEM குழுவையும் நிறுவியுள்ளதாக அவர் கூறினார்.
பல்வேறு STEM தொடர்பான மேம்பாட்டுத் திட்டங்கள், முன்முயற்சிகள் மற்றும் செயல்பாடுகள் பள்ளிகளில்
செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் விரும்பியபடி மாணவர்களின் ஆர்வத்தையும் பங்கேற்பையும் அதிகரிக்க அமைச்சு
மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு
தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஃபத்லினா கூறினார்.
தேசிய உயிரியல் பொருளாதார
கண்காட்சி 2024ஐ நேற்று திறந்து வைத்து பேசிய பிரதமர், அறிவியல், தொழில்நுட்பம்
மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் சாங் லிஹ் காங்கை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆகியவற்றில் மாணவர்களின் ஆர்வத்தை ஈர்க்கும்
வகையில்,
பயோடெக்னாலஜி துறையில் 100 விஞ்ஞானிகளை பட்டியலிடுமாறு
கேட்டுக் கொண்டார். மலேசியா முழுவதும் 100 பள்ளிகளில் இது குறித்துப் பேச்சுவார்த்தை
நடத்துமாறும் அவர் அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *