RM 2 மில்லியன் மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகளுடன் ஆடவர் கைது!

top-news

ஜூன் 1,

சட்டவிரோதமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 6100 KARTON சிகரெட்டுகளை எல்லை பாதுகாப்பு கடத்தல் சிறப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். கூலிம் சாலையில் ரோந்து பணியிலிருந்த PGA அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய லாரியைச் சோதனையிட்ட போது சுங்க வரி செலுத்தப்படாத மலிவு விலை சிகரெட்டுகள் அடங்கிய பெட்டிகளைப் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரைக் கைது செய்திருப்பதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு சுமார் RM 2,014,600 ரிங்கிட் என கணக்கிடப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக இந்த கடத்தல் சிகரெட்டுகள் மலேசியாவுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தடை செய்யப்பட்ட இந்த வகை சிகரெட்டுகள் PERAK, KEDAH, PINANG ஆகிய மாநிலங்களில் அதிகமாக விற்கப்படுவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Seorang lelaki ditahan di Jalan Kulim selepas didapati membawa 6,100 karton rokok seludup bernilai RM2 juta. Rokok tidak bercukai itu dipercayai diseludup dari luar negara untuk dijual di Perak, Kedah dan Pulau Pinang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *