மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்குப் பெற்றோர்களின் பங்களிப்பு அவசியம்! - துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி
- Thina S
- 29 Sep, 2024
குழந்தைகளுக்கான முதன்மை கல்வியைப் பெற்றோர்களால்
மட்டுமே வழங்க முடியும் என துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார். நேற்று
கிள்ளானில் நிமலன் குமார் எனும் மாணவரின் மர்ம தேசத்தில் ஒரு மந்திர பாட்டி' எனும் நூலை ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அதிகாரப்பூர்வமாக
வெளியிட்டார். ஒரு மாணவரின் தனித்திறனை அடையாளம் கண்டு பெற்றோர்கள் வளர்த்தால் அம்மாணவரின்
கல்வியும் திறனும் மேம்படும் என செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார். மாணவர்களுக்கு
நிறைவானச் சூழலை உருவாக்குவதில் தமிழ்ப்பள்ளிகள் முக்கிய பங்காற்றுகின்றனர், பெற்றோர்களின் மனநிலைக்கு ஏற்ப இருக்கும் பள்ளிகளை விடவும் மாணவர்களின் மனநிலைக்கு
முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகிறது.
தமிழ்ப்பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் அதிகமாக
இருப்பது தமக்கும் மனநிறைவை அளிப்பதாகவும் அவர்களின் தாய்மை உணர்வால் நம் மாணவர்களுக்கு
அன்பும் அறிவும் முழுமையாகக் கிட்டும் என செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நம்பிக்கை அளித்தார்.
இந்தியாவின் பிரதமர் மலேசியப் பிரதமர் அன்வாரிடம் திருக்குறளுக்கு அங்கீகாரம் வழங்க
வேண்டும் என வினவியது, திருக்குறளின் மாண்பையும்
மேன்மையையும் நமக்கு மேலும் உணர்த்தியுள்ளது. அனைத்து நிலையிலும் நாம்
அனைவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் திருக்குறளை அனைவரும் அறியும் வகையில்
நம் தமிழ்ப்பள்ளிகள் செயல்படுவதற்கு அரசு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும்
என அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *