இஸ்மாயில் சப்ரி முன்னாள் மருமகனிடம் அடுத்த வாரம் இந்தோனேசியாவில் வாக்குமூலம் பதிவு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 3-

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் முன்னாள் மருமகன் டத்தோ ஜோவியான் மண்டாகியிடமிருந்து அடுத்த வாரம் இந்தோனேசியாவில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. ஜாகர்த்தா நகரில் இரண்டு நாட்களுக்கு அவரிடமிருந்து மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) வாக்குமூலத்தைப் பதிவு செய்யவுள்ளது என்று தகவலறிந்த வட்டாரமொன்று குறிப்பிட்டது.

முப்பத்தொன்பது வயது ஆடை வடிவமைப்பாளரான ஜோவியானைச் சந்தித்து வாக்குமூலம் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புலன்விசாரணை அதிகாரிகள் அடுத்த வாரம் ஜாகர்த்தாவுக்குச் சென்று அங்கேயே இரண்டு நாட்கள் தங்கியிருந்து அவரிடமிருந்து வாக்குமூலம் எடுப்பார்கள் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

இஸ்மாயில் சப்ரியின் மூத்த மகள் நினா சப்ரினா இஸ்மாயிலின் முன்னாள் கணவரே ஜோவியான் ஆவார். தமது ஆடை வடிவமைப்புத் தொழிலை நிறுத்தப்பட்டு விட்டதாக கடந்தாண்டு அறிவித்த ஜோவியான் அதன் பிறகு ஜாகர்த்தாவுக்கு இடம்பெயர்ந்தார்.இஸ்மாயில் சப்ரிக்குச் சொந்தமான பல சொத்துகள் ஜோவியானின் பெயரில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அது குறித்து ஜோவியானிடம் எம்ஏசிசி அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.

லஞ்சஊழல் மற்றும் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் இஸ்மாயில் சப்ரியிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாட்டின் ஒன்பதாவது பிரதமரான அவர் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியன்று தமது சொத்து விவரங்களை அறிவித்தார்.அந்த சொத்துகள் எவ்வாறு ஈட்டப்பட்டது என்பதை அறிந்து கொள்ள எம்ஏசிசி விசாரணை நடத்தி வருகிறது.

SPRM akan merakam keterangan Datuk Jovian Mandagie, bekas menantu Ismail Sabri, di Jakarta minggu depan berkaitan siasatan rasuah dan pengubahan wang haram. Harta atas namanya dikaitkan dengan bekas Perdana Menteri itu sedang disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *