விமான நிலையத்தில் 105 வெளிநாட்டினர்கள் கைது!

top-news

மே 31,

சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயன்ற 105 வெளிநாட்டினர்கள் KLIA விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். மலேசிய எல்லை கட்டுப்பாட்டுப் பாதுகாப்பு ஆணையமான AKPS எனும் சிறப்புப் படையினர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நடத்திய சோதனையில் சுமார் 40 வெளிநாட்டினர்கள் சோதனையிடப்பட்டதில் பல்வேறு ஆவணங்கள் குறைபாடுகளுடன் மலேசியாவுக்குள் நுழைந்த 105 வெளிநாட்டினர்களைக் கைது செய்துள்ளதாக மலேசிய எல்லை கட்டுப்பாட்டுப் பாதுகாப்பு ஆணையமான AKPS ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 105 வெளிநாட்டினர்களும் குறிப்பிட்ட 3 விமான நிறுவனங்கள் மூலமாக மலேசியாவுக்குள் நுழைந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் சம்மந்தப்பட்ட 3 விமான நிறுவனங்கள் மீதும் விசாரணையை மேற்கொள்வதாகவும் மேலதிக விசாரணைக்காகச் சம்மந்தப்பட்ட வெளிநாட்டினர்களைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களின் கடப்பிதழ்கள் முடக்கப்பட்டிருப்பதாகவும் மலேசிய எல்லை கட்டுப்பாட்டுப் பாதுகாப்பு ஆணையமான AKPS தெரிவித்துள்ளது.

Seramai 105 warga asing ditahan di KLIA selepas didapati cuba memasuki Malaysia secara haram dengan dokumen yang meragukan. Mereka masuk melalui tiga syarikat penerbangan dan kini dalam siasatan lanjut oleh pihak berkuasa keselamatan sempadan AKPS.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *