மக்களின் சிரமம் புரியாத எதிர்கட்சியினர்! Yb.Thulsi சாடல்

top-news
FREE WEBSITE AD

பேராக்கில் ஏற்படும் இயற்கை பேரிடரிலிருந்து பொது மக்களைக் காக்க Simpang Pulai சட்டமன்ற உறுப்பினர் Wong Chai Yi இயற்கை பேரிடரால் முக்கியமாக மழை வெள்ளத்தால் பாதிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உடனுக்குடன் தீர்வளிக்க வேண்டும் என்பதற்காகப் பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் மசோதாவை ஏற்றினார். 

குறிப்பிட்ட மசோதாவைப் பேராக் மாநில எதிர்கட்சித் தலைவரான YB Razman உட்பட 3 எதிர்கட்சியினர் அம்மசோதாவை எதிர்த்திருப்பது மக்கள் மீது அவர்களுக்குக் கிஞ்சிற்றும் அக்கறை இல்லை என்பதையும் இவர்களின் மலிவான எதிர்ப்பு அரசியலுக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பணையம் வைப்பதாக Buntong சட்டமன்ற உறுப்பினர் Thulsi Manogaran சாடினார். 

காலங்காலமாக இயற்கை பேரிடரால் மக்கள் பாதிக்கப்பட்டதற்குப் பின் அவர்களுக்கான உதவிகளையும் ஆதரவுகளையும் செய்து வருகிறது அரசு. ஆனால் இது நிரந்தரமானத் தீர்வாகாது. வெள்ளம் வருமுன் அணையைக் கட்ட வேண்டும். பாதிக்கும் முன்னரே மக்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என் எதிர்கட்சியினர் உணராமல் மலிவு அரசியல் நடத்துவதாக Thulsi இன்று சட்டமன்றக் கூட்டத் தொடரில் எதிர்கட்சியினரைச் சாடினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *