வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்களுக்கு RM8,000 ஜாமீன்!

- Sangeetha K Loganathan
- 03 Jun, 2025
ஜுன் 3,
3 பேர் கொண்ட கும்பல் 19 வயது இளைஞரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவர்கள் மூவரும் BUTTERWORTH Sesyen நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்து நீதிமன்ற விசாரணையுடன் ஜாமின் மனுவையும் தாக்கல் செய்த நிலையில் சம்மந்தப்பட்ட மூவருக்கும் தலா RM8,000 ஜாமினுடன் கூடுதல் நிபந்தனை ஜாமினை BUTTERWORTH Sesyen வழங்கியது உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட 23 வயதுள்ள மூவரும் கடந்த மார்ச் 15 அதிகாலை 6 மணியளவில் நிப்போங் தெபாலில் உள்ள 7-Eleven வணிகக் கடையில் 19 வயது இளைஞரை மிரட்டி பணத்தையும் சிகரெட்டுகளையும் வழிப்பறிச் சசெய்தததாகக் குற்றம் சாட்டப்பட்டனர். வழிப்பறி தொடர்பான எந்தவோர் ஆதாரமுமில்லாததால் ஜூலை 1 வரையில் சம்மந்தப்பட்ட மூவரும் வழிப்பறியில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்கும்படி காவல்துறைக்கு BUTTERWORTH Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞரையும் ஜூலை 1 நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tiga lelaki berusia 23 tahun dituduh merompak seorang remaja 19 tahun di sebuah kedai serbaneka di Nibong Tebal. Mereka mengaku tidak bersalah dan dibenarkan ikat jamin RM8,000 setiap seorang oleh Mahkamah Sesyen Butterworth dengan syarat tambahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *