அம்னோவுக்கு மேலும் 1 அமைச்சரவை வேண்டும்! – ZAHID வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 31 May, 2025
மே 31,
ஒற்றுமை அரசாங்கத்தில் அமைச்சரவையில் அம்னோவுக்கு 7 அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது TENGKU ZAFRUL அம்னோவிலிருந்து வெளியேறிய நிலையில் அம்னோவுக்கு மேலும் 1 அமைச்சரவை வேண்டும் என அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு முகைதீன் தலைமையிலான அமைச்சரவையில் TENGKU ZAFRUL க்கு வழங்கப்பட்ட அமைச்சர் பொறுப்பு அம்னோவுக்கான ஒதுக்கீடாகக் கருதப்படவில்லை என்றாலும் ஒற்றுமை அரசாங்கத்தில் TENGKU ZAFRUL வகிக்கும் அமைச்சர் பொறுப்பு அம்னோவுக்காக வழங்கப்பட்டது என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi விளக்கினார்.
TENGKU ZAFRUL அமைச்சரவையில் இருக்க வேண்டுமா இருக்க வேண்டாமா என்பது பிரதமர் Datuk Seri Anwar Ibrahim எடுக்க வேண்டிய முடிவு, பிரதமராக யார் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அன்வார் என்றாலும் கூட்டணிக்காக வழங்கப்பட்ட அமைச்சரவை எண்ணிக்கையைத் தக்க வைக்க வேண்டியதும் கூட்டணி தலைவர்களின் கடமை என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi குறிப்பிட்டார். இது வரையில் அம்னோவுக்கு 7 அமைச்சர் பொறுப்புகள் இருந்த நிலையில் தற்போது 6 அமைச்சர் பதவிகளாகக் குறைந்துள்ளது என்பதால் அம்னோ தங்களுக்கான 1 அமைச்சரவையைக் கேட்பதில் நியாயமிருப்பதாக Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
Datuk Seri Dr Ahmad Zahid Hamidi menegaskan UMNO berhak menerima satu lagi jawatan menteri selepas Tengku Zafrul keluar parti. Beliau menekankan pentingnya mengekalkan keseimbangan jawatan kabinet mengikut pengagihan dalam kerajaan perpaduan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *