UMNO - PKR இடையே விரிசலா? - தலைவர்கள் சந்திப்பு

top-news
FREE WEBSITE AD

அம்னோ பிகேஆர் கட்சிகளின் இளைஞர்களிடையே கருத்து முரண்கள் ஏற்படுவதால் அது வெளிப்படையானத் தாக்குதலை ஏற்படுத்தி வரும் நிலையில் அம்னோ தலைவர் ZAHID HAMIDI, PKR தலைவர் ANWAR என உயர்மட்ட அரசியல் தலைவர்கள் கலந்துரையாடலை நடத்தியதாக அறியப்படுகிறது.

ஒற்றுமை அரசாங்கத்தின் நிலையான ஆட்சிக்கு PKR,UMNO,DAP,AMANAH,MCA,MIC கட்சிகளின் ஆதரவுகளை உறுதிப்படுத்தவும் கருத்து முரண்களைச் சுமூகமாகப் போக்கவும் இது போன்ற கலந்துரையாடல்கள் அவசியம் என அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான AHMAD ZAHID HAMIDI  தெரிவித்தார். 

கட்சிகளுக்கிடையிலானக் கடந்த காலக் கசப்பான அனுபவங்கள் பல இருப்பதால், தற்போது அது வெளிப்படுவதாகவும், இதனால் ஆட்சிக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றாலும், கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களின் எதிர்காலத்தை இது பாதிப்பதாகவும் மக்களிடையிலான நம்பகத்தன்மையை இது சீர்குலைப்பதாகவும் இருப்பதனால் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக Ahmad Zahid Hamidi தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *