மேகலாவின் சொக்சோ தொகை விசயம் பற்றி புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் விளக்கம்!
- Muthu Kumar
- 23 Sep, 2024
ஈப்போ, செப். 23-
அண்மையில் தமிழ் மலர் பத்திரிகையில் “எனக்கு சொக்சோ தொகை ஏதும் கிடைக்கவில்லை மேகலா வருத்தம் என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியானது. இவ்விவகாரம் உண்மையற்றது என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் கூறினார்.
இந்த குடும்பமாது உதவிகேட்க புந்தோங் மக்கள் சேவை மையத்தை நாடினார்.இவரது ஆவணங்கள் மற்றும் தகவல்களை சரிபார்த்த பொழுது இவருக்கு சொக்சோ கிடைத்து வருவதாக அறிய வந்தோம். சொக்சோ கிடைத்து வரும் நபருக்கு சமூக நல இலாகாவின் உதவிகள் கிடைக்க வாய்ப்பில்லை என்று அவர் குறிப்பிட்டார். இந்த பெண்மணி செயற்கைக்கால் பொருத்தப்பட்டு நடக்கக்கூடியவர். அதனை எனது பணிமனைக்கு வந்தபோது நேரில் கண்டுள்ளேன்.
அப்படியிருக்க என்னால் நடக்க முடியவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல என்று துளசி வருத்தமாக கூறினார்.பொதுமக்களின் உதவிகள் இவர் ஏற்கெனவே கிடைக்கப்பெற்றவர். அதன் முழு விரங்களை இவர் வெளியிடவில்லை. குறிப்பாக, எவ்வளவு உதவித்தொகை மற்றும் அப்பணத்தை பயன்படுத்திய முறைகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிட்டதில்லை. இவருக்கு புந்தோங் சட்டமன்ற மக்கள் சேவை மையமும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற சேவை மையமும் உதவிகள் வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களிடம் உதவி கோரும் நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்ள வேண்டுமென்றால், மேகலா நேர்மையுடன் நம்பகத்தன்மையுடன் முதலில் செயல்பட வேண்டும். இவருக்கு கிடைத்த உணவுக் கூடைகள் குறித்து ஏன் கூறவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இவரது ஆவணங்கள் வாயிலாக சமூகநல இலாகாவினர் இவரது வங்கி கணக்கு மற்றும் இவரின் சொந்த வீடு போன்ற விவரங்கள் குறித்த தகவலை வைத்திருக்கலாம். அதன் அடிப்படையில் இவருக்கு சமூகநல உதவிகள் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று அவர் கோடிகாட்டினார்.புந்தோங் சட்டமன்ற மக்கள் சேவை மையம் அவருக்கு உதவிட தயாராகவுள்ளது. மேகலா தயாரா? என்று கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *