TENGKU ZAFRUL அமைச்சராக நீடிப்பார்! – அன்வார் முடிவு!

top-news

ஜூன் 1,

அம்னோவிலிருந்து வெளியேறினால் அமைச்சராக இருக்க கூடாதா என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim கேள்வி எழுப்பினார். முதலீடு வர்த்தகம் தொழில்துறை அமைச்சரான Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz அம்னோவ்லிருந்து வெளியேறியதால் அமைச்சரவையில் அவர் நீடிக்க கூடாது என அம்னோ பொதுச் செயலாளர், அம்னோ தலைவர் ZAHID HAMIDI அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் AKMAL SALEH ஆகியோர் வலியுறுத்தி வரும் நிலையில் TENGKU ZAFRUL அமைச்சராக நீடிப்பார் என பிரதமர் அன்வார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் அந்த பொறுப்பில் எப்படி செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை மட்டுமே சீர்தூக்கிப் பார்த்து அவரின் அமைச்சர் பதவியை நிர்ணயிக்க வேண்டுமே தவிர அவரின் அரசியல் செயல்பாடுகள் குறித்து இல்லை என்றும், அரசியல் கட்சியின் வலியுறுத்தலாலும் இல்லை என Datuk Seri Anwar Ibrahim விளக்கமளித்தார். TENGKU ZAFRUL ஒரு கட்சியிலிருந்து விலகி, மற்றொரு கட்சியில் இணைவதற்கான விண்ணப்பத்தைச் செய்துள்ளார். அவ்வளவுதான், அது எந்த கட்சி, யாருடைய கட்சி என்பதெல்லாம் கேள்வி அல்ல. ஏன் விலகினார், எதற்காக விலகினார், முந்தைய கட்சியின் நிலைப்பாடும் கொள்கையும் என்ன, தற்போதைய கொள்கையும் அரசியல் நிலைப்பாடும் என்பதே கேள்வியுற வேண்டும் என்றும் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.

Perdana Menteri Anwar Ibrahim menegaskan bahawa Tengku Zafrul akan terus memegang jawatan menteri meskipun meninggalkan UMNO. Keputusan tersebut berdasarkan prestasi, bukan afiliasi politik, dan tidak dipengaruhi oleh tekanan mana-mana parti politik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *