நாடு முழுவதும் 4,619 வெள்ளப்பெருக்கு இடங்கள்! - துணைப் பிரதமர் தகவல்
- Muthu Kumar
- 04 Oct, 2024
கோத்தா திங்கி, அக் 4: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை நாடு முழுவதும் 4,619 வெள்ளப்பெருக்கு இடங்களை அடையாளம் கண்டுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா), வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) மற்றும் தேசிய வெள்ள முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை மையம் மூலம் தொடர்ச்சியான வெள்ளக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அணைகளையும், குறிப்பாக பெரிய மற்றும் அதிக நீர் அளவைக் கொண்ட அணைகள் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான ஜாஹிட், 2.15 மில்லியன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்கக்கூடிய 8,481 தற்காலிக நிவாரண மையங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் அடிப்படை வசதிகள் குறித்தும் உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *