சுங்கை பாரி ஆண்கள் இடைநிலைப்பள்ளியில் தமிழ்ழொழி அறை!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, அக்.1-

புந்தோங் தொகுதியில் சுங்கை பாரி ஆண்கள் இடைநிலைப்பள்ளியில் முதல்முறையாக தமிழ்ழொழி அறையை பள்ளி முதல்வர் துவான் அமாட் ரிஷாவுடின் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இப்பள்ளியின் இந்து மாணவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை மணி 7.15 முதல் 8.00 மணி வரை அருகிலுள்ள ஆலயங்களுக்கு வேட்டி கட்டிச் சென்று இறைவழிபாடு செய்ய அனுமதி வழங்கியுள்ளதாகவும் அதே நேரத்தில் இதர சமயத்தினர் அவரவர் முறையில் இறைவழிபாட்டை மேற்கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் இப்பள்ளியின் முதல்வர் கூறினார்.

இப்பள்ளியில் 98 சதவீத இந்திய மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து வந்தவர்கள். ஆகையால் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை தேர்வு பாடமாக எடுக்க வலியுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இப்பள்ளியின் தமிழ்மொழி ஆசிரியை கலைமதியின் துணையோடும் நேசக்கரங்கள் இயக்கத்தினர் மற்றும் துர்காஷினி எண்டர்பிரைஸ் நிறுவன உரிமையாளரின் ஆதரவில் சிறப்பான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தமிழ்மொழி வகுப்பறை திறக்க முடிந்ததாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

இப்பள்ளியின் முதல்வர் எந்தவொரு பாகுபாடுமின்றி மலாய், தமிழ்மொழி மற்றும் ஆங்கில மொழி வளர்ச்சிக்கு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் தமிழ்மொழி வகுப்பறை திறப்பதற்கு அனுமதி மற்றும் ஆதரவு வழங்கியதற்கு இப்பள்ளியின் முன்னாள் தலைமை மாணவரும், நேசக்கரங்கள் இயக்கத் தலைவருமான இரா.ஜெயசீலன் நன்றி கூறினார்.

இந்த தமிழ்மொழி அறை உருவாக்க உதவிய நேசக்கரங்கள் இயக்கத்தினர் மற்றும் துர்காஷினி எண்டர்பிரைஸ் உரிமையாளருக்கும் அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இம்மாதிரியான அதிக இந்திய மாணவர்கள் பயிலும் இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி வகுப்பறை உருவாக்கினால் மிகவும் சிறப்பாகும். இதனை அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அல்லது இந்திய இயக்கங்கள் பள்ளி ஆதரவோடு உருவாக்கினால் மாணவர்கள் படிப்பதற்கு பேருதவியாக அமையும் என்று அவர் கருத்துரைத்தார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *