கிள்ளானில் நாளை கோலாகலமாகத் தொடங்குகிறது தமிழிசை விழா!

- Shan Siva
- 18 Apr, 2025
கிள்ளான், ஏப்ரல் 18: ‘தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன்’ என்னும் கருப்பொருளோடு ‘தமிழிசை விழா 2025’ நாளை (ஏப்ரல் 19) கிள்ளான் தெலுக் புலாய் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் நாவலர் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கி நடைபெறும் இவ்விழா நாளை தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.
கலைமாமணி TL மகராஜன், இசைச்செல்வர் ஐதராபாத் முனைவர் பா.சிவா ஆகியோரின் இசை அரங்குகள், அருள்வேந்தன் மனோகரன் தலைமையில் அருள் நுண்கலைப் பள்ளி மாணவர்களின் திருப்புகழ் இசை அரங்கம், இரகுராமனின் மலேசிய தமிழிசைப் பாடல் அரங்கம், தஞ்சைக் கமலா இந்திரா நாட்டியப் பள்ளியின் நாட்டிய நாடகம், மா.துருவன் குழுவினரின் வில்லுப்பாட்டு எனப் பல சிறப்பு அங்கங்களுடன் இவ்விழா நடைபெறவிருக்கிறது.
தமிழிசையை மீட்டெடுத்தவர்களில் ஆப்ரகாம் பண்டிதர் மிக முதன்மையானவர். அவரது பேத்தி முனைவர் அமுதா பாண்டியன் மற்றும் நம் நாட்டின் தமிழறிஞர் திருமாவளவன் ஆகியோர் தமிழிசை பற்றி உரையாற்ற உள்ளனர்.
தமிழிசை வளத்தையும் தொன்மையையும் பறைசாற்றும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இவ்விழா, நாளை சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கும் மறுநாள் ஏப்ரல் 20 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30க்கும் தொடங்குகிறது.
நிகழ்வின் சிறப்பு வருகையாளர்களாக ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன், டத்தோ டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரன், மேனாள் விரிவுரையாளர் ஆசான் மன்னர் மன்னன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கின்றனர்.
நுழைவு இலவசம் என்பதோடு, பல்வேறு சிறப்பு அங்கங்களும் வித்தியாசமாக ஏற்பாடு செய்யப்படுள்ளதால், தமிழிசைத் தேன் பருக பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!
Festival Tamil Isai 2025 berlangsung pada 19 dan 20 April di Kuil Subramaniar, Teluk Pulai, Klang. Pelbagai persembahan seperti muzik, tarian, villupattu dan ceramah dianjurkan. Tokoh-tokoh terkenal turut hadir. Masuk adalah percuma untuk orang ramai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *