வெள்ளி : 9 மே, 2025
5 : 47 : 33 PM
முக்கிய செய்தி

பள்ளிச் சீருடையில் தேசிய கொடியை ஒட்டுவதில் என்ன பிரச்சனை? அன்வார் கேள்வி!

top-news

மார்ச் 28,

பள்ளிச் சீருடையில் தேசிய கொடியை ஒட்டுவதைக் கல்வி அமைச்சர் கட்டாயமாக்கியிருப்பதால் யாருக்கு என்ன இழப்பு, அதில் என்ன பிரச்சனை எனும் கேள்வியைப் பிரதமர் அன்வார் முன்வைத்துள்ளார். சிறு வயதிலேயே நாட்டுப் பற்றை விதைக்கும் இம்மாதிரியான முயற்சிகள் ஆதரிக்கபட வேண்டுமே தவிர இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக்க கூடாது என அவர் வலியுறுத்தினார்.

பள்ளிச் சீருடையில் தங்கள் நாட்டின் கொடியை வைத்திருப்பது போற்றுதலுக்குரியது. தேசியத்தையும் தேசிய கொடியையும் மதிக்கும் மாண்பை உணர்த்துவதற்காக இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் எந்தவொரு செலவீனங்களும் ஏற்படாது. ஏனெனில் பள்ளிச் சீருடையில் வைக்கப்படும் தேசிய கொடியும் வழங்கப்பட்டு விடும் நிலையில் அதைப் பள்ளிச் சீருடையில் ஒட்டுவது அவ்வளவு சிரமமானக் காரியமா என பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.

Perdana Menteri Anwar Ibrahim mempersoalkan bantahan terhadap keperluan menampal bendera Malaysia pada uniform sekolah, yang diwajibkan oleh Menteri Pendidikan. Beliau menegaskan langkah ini menanam semangat patriotisme tanpa membebankan ibu bapa atau sekolah kerana bendera akan disediakan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *