இந்தியா – பாகிஸ்தான் போர் சூழல் மலேசியாவுக்கான அரிசி வரவு பாதிக்கும்!

- Shan Siva
- 06 May, 2025
பாரிட் புந்தார், மே 6: அரிசி ஏற்றுமதி செய்யும் இரண்டு முக்கிய நாடுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றத்தால், மலேசியாவிற்கான அரிசி விநியோகம் பாதிக்கப்படலாம் என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.
இரு நாடுகளும்
தற்போது மலேசியாவின் அரிசித் தேவைகளில் கிட்டத்தட்ட 30 விழுக்காடு அளவுக்கு வழங்குகின்றன. இதில் பச்சரிசி
மற்றும் பாஸ்மதி ஆகியவை அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
மலேசியாவில்
உணவுப் பாதுகாப்பிற்கு அவ்விரு நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை
மிக முக்கியம். துறைமுக செயல்பாடுகள் அல்லது விநியோக உள்கட்டமைப்பைப் பாதிக்கும்
ஒரு போர் அல்லது பதட்டங்கள் ஏற்பட்டால், நமது நாட்டிற்கான அரிசி இறக்குமதி தடைபடக்கூடும் என்று அவர் விளக்கினார்.
தற்போது, விநியோகம் இன்னும் நிலையானதாக இருந்தாலும், ஆனால் நாம் மெத்தனமாக இருக்க முடியாது என்று நெல் விதை மேம்பாட்டுத் திட்ட நிகழ்வொன்றில் அவர்
கூறினார்.
மலேசியா அதன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் சுமார் 38 சதவீதத்திற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானை நம்பியுள்ளது என்றும், இந்தியா பச்சரிசியையும், பாகிஸ்தான் பாஸ்மதியையும் வழங்குகிறது என்றும் முகமது கூறினார்.
Menteri Pertanian dan Keselamatan Makanan, Datuk Seri Mohamad Sabu berkata bekalan beras Malaysia mungkin terjejas akibat ketegangan antara India dan Pakistan yang menyumbang hampir 30% kepada import beras negara, termasuk beras putih dan basmati.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *