மேஷ் சிறைச்சாலை எனும் உலகின் மிகவும் கொடுமையான சிறைச்சாலை!
- Muthu Kumar
- 29 Sep, 2024
உலகத்திலேயே மிகவும் கொடுமையான சிறைச்சாலை என்றால் அது அயர்லாந்தில் உள்ள மேஷ் ப்ரீசன் எனும் மேஷ் சிறைச்சாலை..இது கடலிலும் இல்லை தீவுகளிலும் இல்லை அயர்லாந்த்தின் நிலப்பகுதியில் தான் அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலை ஹச் வடிவில் மொத்தம் எட்டு பிளாக் கொண்டது.ஒவ்வொரு பிளாக் சுற்றியும் குண்டுகள் போட்டாலும் உடையாத 15 அடி சுவர்கள் உள்ளது.
மொத்த சிறைச்சாலையை சுற்றிலும் இதே அளவு பெரிய சுவர்கள் உள்ளது. அது மட்டுமில்லாமல் 1970 லேயே உருவாக்கப்பட்ட மிகபெரிய ஆட்டோமேட்டிக் கதவு உள்ளது. 24 மணி நேரமும் ஆயுதங்களுடன் கூடிய போலீசார்கள் வாட்ச் டவர் சுற்றிலும் காணப்படுவார்கள். அப்படிப்பட்ட உலகின் பாதுகாப்பான கொடுமையான சிறையிலிருந்து 38 கைதிகள் தப்பித்த ஒரு விஷயத்தை பற்றி இங்கு காண்போம்.
அயர்லாந்து ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கும் பொழுது அங்கே பிரிட்டிஷுக்கு எதிராக போராடும்
"அயர்லாந்து ரிபப்ளிகன் ஆர்மி" என்று அழைப்பார்கள்.இந்த "IRA" என்று அழைக்கப்படக்கூடிய கைதிகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் இந்த மேஸ் சிறைசாலையில் தான் போடுவார்கள். இப்படி இந்த சிறையில் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிக் கொண்டிருந்த சமயத்தில் அங்குள்ள கைதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து "ஹங்கர் ப்ரோட்டெஸ்ட்" என்ற போராட்டம் செய்து சாகும் வரை சாப்பிடாமல் இருந்து உயிர் இறந்த நிகழ்வுகள் நடந்துள்ளது.
இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பரவியது. இந்த நிலையில் இந்த சிறையில் இருக்கும் IRA கைதிகள் இப்படியே நாம் இங்கு போராட்டம் செய்தால் இறந்து விடுவோம். அதனால் இங்கிருந்து தப்ப வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதற்கு லேரி மார்லே என்பவர்தான் மாஸ்டர் மைண்ட் என்று சொல்லலாம்.மேரி மார்லே 1975 ஆம் ஆண்டு பிரிட்டிஷுக்கு எதிராக குரல் கொடுத்து சிறிய சிறையில் அடைக்கப்பட்டாலும் சாதாரணமாக தப்பி வெளியே வந்துள்ளார். அவர் வந்தது மட்டுமல்லாமல் கூடவே 9 பேரையும் தப்பிக்க வைத்தார்.
அதன் பின் பிரிட்டிஷ் அரசாங்கம்
லேரி மார்லேவின் மீது மிகவும் கோபப்பட்டு அவனைத் தேடி மீண்டும் தப்பிக்க முடியாத அளவிற்கு மேஸ் சிறைச்சாலையில் போடுகின்றனர். அங்கேயும் தான் தப்பிக்க திட்டம் தீட்டி சிறை அதிகாரியின் உடைய திருடி, சிறை அதிகாரி போல மாறி அந்த
"ஹச் பிளாக் "சிறையில் அங்குமிங்கும் நடந்து, எங்கு போவது என்று தெரியாமல் கடைசியாக வெளியே போகும் பொழுது சிறை அதிகாரியின் சாமர்த்தியத்தால் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் லேரி மார்லே.
இந்த முறை அவர் அடைக்கப்பட்டது "ஏழாவது பிளாக்" இனிமேல் தப்பிப்பதற்கு இது சாதாரண சிறைச்சாலை கிடையாது. இது ஏழாவது பிளாக் உலகிலேயே மிகவும் பாதுகாப்பாக கொடுமையான சிறை என்று அழைக்கப்படும் மேஷ் சிறைச்சாலை.
இந்த முறை சரியாக தப்பிக்க வேண்டும் என்று தெளிவான திட்டம் போடுகிறார் லேரி மார்லே. அதற்காக தன்னுடன் சக கைதிகள் அடக்கிய ஒரு குழு அமைக்கிறார். அதில் முக்கியமானவர்களாக "பாபி ஸ்டோரே" அவர்தான் குழுவின் தலைவர். அடுத்து
"கேரி ஹெலி".. மூன்றாவதாக ப்ரேன்டன். இவர்கள் அனைவரும் ஒன்று சேரும் பொழுதெல்லாம் எப்படி தப்பிப்பது பற்றி பேசுவார்கள்.அதற்கு முதலில் ப்ளு பிரிண்ட் வேண்டும். சிறையில் இருக்கும் அதிகாரிகள் மூலம் ப்ளூ பிரிண்ட் கிடைக்காது.
சிறைச்சாலைக்கு வெளியே இருக்கும் ஊடகங்கள் இந்த ப்ளூ பிரிண்ட் பற்றி விளக்கம் அதிகம் கொடுத்திருக்கின்றன என பாபி சொல்கிறார்.அடுத்த செயலாக தங்களை சந்திக்க வரும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், IRA சம்பந்தப்பட்டவர்கள் மூலமாக ப்ளூ பிரிண்ட் கிடைக்கிறது. இதை வைத்து உடனே தப்பிக்க முடியாது. ஏனென்றால் கஷ்டப்பட்டு தப்பித்து வெளியே செல்லும் பொழுது முதல் கதவுக்கு சென்றாலும், அதற்கடுத்து வாட்ச் டவர், அதற்கு அடுத்த பிரிட்டிஷ் ராணுவ முகாம், கடைசியாக வெளியே செல்லும் முக்கிய கதவு, இது எல்லாம் மிகவும் கடினம்... இது எல்லாம் மீறி தப்பிக்க வேண்டும் என்றால் அந்த சிறைக்கு உணவு கொண்டு வரும் புட் வேன்.
இந்த ஃபுட் வேனில் வரும் அனைவருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருக்கும்.
கண்டகண்ட இடத்தில் புட்வேன் நிற்காது. ஹச் பிளாகின் சிசிடிவி பொருத்தப்பட்ட அறையில் இந்த புட்வேன் நிற்கும். அந்த அறையை சுத்தப்படுத்த சிறை அதிகாரிகளின் நம்பிக்கை பெற்ற ஒரு கைதி இருப்பார். சுத்தம் செய்யும் கைதியாக நம் குழுவில் உள்ள யாராவது செல்ல வேண்டும். அந்த பொறுப்பிற்கு பாபி மற்றும் ப்ராண்டனை நியமிக்கிறான் லேரி மார்லே.. ஒரு வழியாக சிறைக்காவலர்களுக்கு பிடித்த ஒரு நபராக பாபி அமைகின்றான். பாபியை புட் வேன் நிற்கும் இடத்தை சுத்தப்படுத்த அனுப்புகிறார்கள். அந்த அறையை சுத்தப்படுத்திய படியே சுற்றி உள்ள அத்தனை பாதுகாப்பு விஷயங்களும் தெரிந்து வைத்துக் கொண்டு லேரியிடம் கூறிய பின் தங்களுடைய அடுத்த திட்டம் பற்றி பேசுகிறார்கள்.
பாபி இன்னும் கூடுதலாக சிறை காவலர்களின் நம்பிக்கை பெற்று சிசிடிவி டிஸ்ப்ளே அறைக்கு சென்று சுத்தம் செய்யும் வேலை செய்கிறான். அங்குள்ள அத்தனை தகவல்களையும் லேரியிடம் சொல்கிறான் பாபி.உடனே லேரி மார்லே எனக்கு சிறை காவலர்கள் அணியும் சீருடையும், துப்பாக்கியும் வேண்டும் என்று கூறுகின்றான். அதன்படி சந்திக்க வரும் IRA ஆட்கள் மூலம் 6 துப்பாக்கிகள் கிடைக்கும் படி பாபி செய்கிறான். அவர்கள் தப்பிக்க ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்கிறார்கள்.ஏனென்றால் அன்று சிறை விடுமுறை. வெறும் 12 சிறை காவலர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள். இறுதியாக தப்பிக்க தேதி தேர்ந்தெடுகிறார்கள் .அதுதான் செப்டம்பர் 25ஆம் தேதி 1983 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை.
வழக்கமாக அனைவரும் அவரவர் வேலைகளை செய்து கொண்டிருக்கும் பொழுது "பம்பர்" என பாபி கூச்சலிட அன்று மதிய உணவு ஒன்றாக எடுத்துக் கொண்ட அத்தனை சிறை காவலர்களும் ஏதோ வேலை காரணமாக பாபி சத்தம் போடுகிறான் என அசால்டாக விட்டுவிடுகின்றனர்.இறுதியாக இது பாபி அவர்கள் குழுவுக்கு கொடுத்த சிக்னல். உடனே லேரி உட்பட கைதிகள் தங்கள் வைத்திருக்கும் துப்பாக்கியோடு 12 சிறை காவலர்களின் சுற்றி வளைத்து அவர்களின் உடைகளை கைப்பற்றி ஃபுட் வேனில் இருக்கும் நபர்களை துப்பாக்கி முனையில் வைத்து அத்தனை சிறை அதிகாரிகளையும்,துப்பாக்கி முனையில் வைத்து சிசிடிவி அறையில் இருக்கும் சிறை காவலரையும் துப்பாக்கி முனையில் வைத்து சிறையில் இருந்து தப்பிக்கின்றனர்.
சிறையில் இருந்து தப்பிக்கும் பொழுது அடுத்த ஷிப்ட்க்கு வந்திருந்த போலீசார் தப்பியோடும் கைதிகளான லேரிக் குழுவிற்கும் உண்மையான சிறைக் காவலர்களுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இதைக் கண்ட வாட்ச் டவரில் இருக்கும் சிறை காவலர்கள் செய்வது அறியாமல் துப்பாகியால் சுடவும் முடியாமல் அமைதியாக பார்க்கின்றனர். ஏனென்றால் அனைவருமே சிறை அதிகாரிகளின் சீருடையில் இருப்பதினால், இதை வைத்து எல்லோரும் தப்பித்து செல்லும் பொழுது சாதாரண சிறையில் இருக்கும் சிறைக் கைதிகளையும் தப்பிக்க விடுகின்றனர் லேரி குழுவை சார்ந்தவர்கள். ஆனால் லேரி மார்லேயவையும் அவர்களின் குழுவ சார்ந்தவர்கள் தப்பித்து ஒரு வருடத்திற்குள் அவர்களை போலீசார் பிடித்து மீண்டும் அதே ஏழாவது பிளாக் சிறையில் அடைக்கின்றனர்.இறுதியாக லேரி மார்லி 1987 ஆம் ஆண்டும், பாபி 1997 ஆம் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
அதன்பின் இன்டர்நேஷனல் அளவில் இதுபோன்ற சிறைச்சாலை இருக்கக் கூடாது என்று 1998ல் பிரிட்டிஷுக்கு எதிராக ஒப்பந்தம் போட்டு, 2000 ஆண்டு இந்த சிறைச்சாலை இருக்கும் எட்டு பிளாக்கில் 7 பிளாக் அழிக்கப்பட்டு ஒரு பிளாக் மட்டும் அழிக்காமல் வைக்கப்படுகிறது. வரும் காலத்தில் இந்த பிளாக்கை மக்கள் பார்ப்பதற்காக மியூசியம் என மாற்றலாம் என்று கூறப்படுகிறது .அது மட்டும் இல்லாமல் இந்த கொடூர சிறை மூடுவதற்கு முக்கிய காரணம் பாபி. ஏனென்றால் பாபி விடுதலையானதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து அரசியல்வாதியாக மாறி மேஷ் சிறைச்சாலையை மூட வைத்திருக்கிறார்..
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *