சிலாங்கூரில் டெங்கி காய்ச்சலால் இருவர் மரணம்! 11,003 பேர் பாதிப்பு!

top-news

மே 29,

ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கி காய்ச்சல் தொற்றால் இந்த மே 18 முதல் மே 24 வரையில் சிலாங்கூரில் இருவர் உயிரிழந்திருப்பதாகச் சிலாங்கூ மாநிலப் பொது சுகாதாரச் சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு உறுப்பினர் Jamaliah Jamaluddin தெரிவித்தார். 2 உயிரிழப்புகள் நேர்ந்த போதிலும் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு டெங்கிக் காய்ச்சல் தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதை Jamaliah Jamaluddin உறுதிப்படுத்தினார். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சிலாங்கூரில் இதுவரை 11,003 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த ஆண்டு 21,316 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் 11 பேர் உயிரிழந்ததாகவும் Jamaliah Jamaluddin சுட்டிக்காட்டினார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் 178 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கிள்ளான் மாவட்டத்தில் 119 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஹுலூ லங்காட் மாவட்டத்தில் 92 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சிலாங்கூரில் 14 மாவட்டங்கள் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 13 மாவட்டங்களாகக் குறைந்துள்ளதையும் Jamaliah Jamaluddin நினைவுருத்தினார். பொதுமக்கள் சுகாதாரத் துறையினருடன் ஒத்துழைத்தால் டெங்கு காய்ச்சலின் வீரியம் அதிகரிக்காது என Jamaliah Jamaluddin வலியுறுத்தினார்.

Dua kematian akibat demam denggi direkodkan di Selangor antara 18 hingga 24 Mei. Sehingga kini, 11,003 kes dilaporkan pada tahun ini berbanding 21,316 kes tahun lalu. Pihak berkuasa menasihatkan kerjasama awam mencegah wabak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *