பேராக்கில் 42 கிலோ கருஞ்சிறுத்தை பிடிப்பட்டது!
.jpg)
- Thina S
- 28 Jul, 2024
Sungai Siput Ladang Jalong பகுதியில் 42 கிலோ எடையுள்ள கருஞ்சிறுத்தை பிடிபட்டது. உள்ளூர்வாசிகளின் கால்நடைகள் சமீபகாலமாகக் காணாமல் போனதால் தோட்டக் குடியிருப்பாளர்கள் அமைத்த பொறியில் 42 கிலோ எடை கொண்ட கருஞ்சிறுத்தை அகப்பட்டதாகவும் தேசிய வனவிலங்கு அதிகாரிகளிடம் அது ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் சம்மந்தப்பட்ட பகுதியில் 100 கும் மேற்பட்ட கால்நடைகள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Ladang Jalong தோட்டப் பரப்பளவில் சிறுத்தைகளின் நடமாட்டம் குறித்தான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தேசிய வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *