லெபனானில் எஞ்சியுள்ள 15 மலேசியர்களை வெளியேற்ற மலேசிய அரசாங்கம் தீவிரம்!
- Muthu Kumar
- 02 Oct, 2024
பெட்டாலிங் ஜெயா, அக் 2:
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் லெபனானில் எஞ்சியுள்ள 15 மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்களை வெளியேற்ற மலேசிய அரசாங்கம் தயாராகி வருவதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை காரணமாக ஒன்பது மலேசியர்கள் தாமாக முன்வந்து லெபனானை விட்டு வெளியேறியதாக வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.பெய்ரூட்டில் உள்ள மலேசியத் தூதரகம் மறு அறிவிப்பு வரும் வரை தனது செயல்பாடுகளைத் தொடரும் என்றும் அது கூறியது.
கடந்த வாரம் லெபனானில் உள்ள மலேசியர்களை உடனடியாக வெளியேறத் தயார்படுத்துமாறு விஸ்மா புத்ரா வலியுறுத்தியதோடு, அதிகரித்து வரும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக அந்த நாட்டிற்கு எந்தப் புதிய பயணமும் வேண்டாம் என்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது!
மேலும், லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு, வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழித் தாக்குதல்களை உள்ளடக்கியதையும் அது கண்டனம் செய்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *