சென்னைதான் தலைநகர், எங்கள் தலைவர் ஸ்டாலின்-பஞ்சாப் முதல்வர்!

- Muthu Kumar
- 24 Mar, 2025
மு.க.ஸ்டாலின் தான் எங்களுக்கு வழிகாட்டும் தலைவர் என்றும் இந்தியாவில் இருக்கின்ற தலைவர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தான் முதலிடத்தில் உள்ளார் எனவும், மாநிலங்கள் உரிமைக்காக தலைமை தாங்குகிற இடம் சென்னை எனவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும், பெருமையுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியதாக அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளர்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தான் எங்களுக்கு வழிகாட்டும் தலைவர் என்றும் இந்தியாவில் இருக்கின்ற தலைவர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தான் முதலிடத்தில் உள்ளார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியதாக அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளர். மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுவரையறை அநீதி உள்ளிட்டவைகளில் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக முதல் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று உரையாற்றினர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் கோவி.செழியன்,"மத்திய அரசே முறையாக நிதியை தா என தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கேட்ட பிறகு தான் அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது அண்டை மாநில முதல்வர்களும் நம்முடைய தளபதியின் கரங்களை பற்றுகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தென்னிந்திய முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் வட இந்தியா பஞ்சாப் முதல்வரும் கலந்து கொண்டனர். அதில் அவர் பேசும் போது நான் பஞ்சாபில் பிறந்தாலும் மாநில உரிமைக்காக நான் தலைமை தாங்குகிற இடம் சென்னை. எங்களுக்கு வழிகாட்டும் தலைவர் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார். அவர் மட்டுமல்ல பினராயி விஜயன், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் மு.க.ஸ்டாலின் தான் எங்களுக்கு வழிகாட்டும் தலைவர் என்று கூறுகிறார்கள்.
இந்தியாவில் இருக்கின்ற தலைவர்களில் நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் முதலிடத்தில் உள்ளார். எனவே வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து திமுக நிர்வாகிகளும் முழு பலத்துடன் பணி செய்து இருநூறு தொகுதிகளில் 234 தொகுதியையும் திமுக கூட்டணி வென்றெடுக்க பாடுபடுவோம்" என தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *