பாம்புகள்,உடும்புகள் மத்தியில் குடியிருக்கும் தாமான் டேசா லத்தானியா குடியிருப்பாளர்கள் பிரச்சனை தீர்க்கப்படும்!
- Muthu Kumar
- 04 Oct, 2024
ஷா ஆலம், அக். 4-
தடஹான் ஏரி முழுவதும் புல் புதர் மண்டிக் கிடக்கும் நிலையில் அங்கு பாம்புகள் உடும்புகளுக்கு மத்தியில் குடியிருக்கும் தாமான் டேசா லத்தானியா குடியிருப்பாளர்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நீண்ட காலமாக கேட்பாரற்ற நிலையில் இருக்கும் அந்த ஏரிப் பகுதியில் வாழ்ந்து வரும் பாம்புகள் உடும்புகள் படையெடுப்பால் மக்கள்
குடியிருப்புப் பகுதியில் வசிப்போர் பலர் புகார் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் செந்தோசா சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மக்கள் நலப் பிரிவின் அதிகாரிகளுடன் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
மோசமான தோற்றத்துடன் காடு போன்று புல் புதர் மண்டி க் கிடக்கும் ஏரியின் கரைப்பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து செல்லும் இந்த உயிரினங்களால் வீட்டில் இருக்கும் சிறு பிள்ளைகளுக்கு ஆபத்துகள் வரக் கூடும் என்று தாங்கள் அஞ்சுவதாக தாமான் டேசா லத்தானியா குடியிருப்பாளர்கள் சிலர் அவரிடம் நேரில் புகார் தெரிவித்தனர்.
காடு போன்று புதர் மண்டிக் கிடக்கும் இடத்தை அழித்து சுத்தப்படுத்தி தடஹான் ஏரியில் தூர் வாரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு வன விலங்கு இலாகா அதிகாரிகள் உதவியுடன் பாம்புகள் மற்றும் உடும்புகளைப் பிடித்து அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தினால் மட்டுமே இதற்கு சரியான தீர்வு பிறக்கும் என்று குடியிருப்பாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
மேலும், தாமான் டேசா லத்தானியா மக்கள் குடியிருப்புப் பகுதி, ஷா ஆலம் பண்டாராயா கண்காணிப்பில் இருப்பதால் அதி விரைவில் அதன் தலைவருடன் கலந்து பேசி இதற்கான தீர்வை தாம் காண விருப்பதாக டாக்டர் குணராஜ் குடியிருப்பாளர்களிடம் உறுதி அளித்தார்.
The problem of Daman Tesa Latania residents living among snakes & iguanas will be solved!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *