பெர்சாத்து உறுப்பினர்கள் PKRஇல் சேர வேண்டுமா? ஃபைஸின் கருத்துக்கள் பொருத்தமற்றவை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 1:  மக்கோத்தா இடைத்தேர்தலில் பெரிகாத்தான் நேசனல் தோல்வியடைந்த பிறகு, கட்சியின் நிறுவன மற்றும் அடிமட்ட உறுப்பினர்கள் பிகேஆரில் சேர வேண்டும் என்ற, பெர்சாத்து கட்சியின் முன்னாள் உச்ச மன்ற உறுப்பினர் ஃபைஸ் நமானின் கருத்தை பெர்சாத்து தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.

இப்போது பிகேஆருடன் இருக்கும் ஃபைஸ், அண்மைய இடைத்தேர்தல்களில் பெர்சாத்து வேட்பாளர்களின் தொடர்ச்சியான தோல்விகள், மலாய் சமூகத்தினர் பெர்சாத்து கட்சியை நிராகரிப்பதை சுட்டிக்காட்டுகிறது என்று தெரிவித்தார்.

PAS உடன் இணைந்ததில் இருந்து சமுதாயத்தை மேம்படுத்தும் அதன் அசல் இலக்கிலிருந்து பெர்சாத்து விலகிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், பெர்சாத்து இளைஞர் தலைவர் வான் அகமட் ஃபைசல் வான் அகமட் கமால், ஃபைஸின் கருத்துக்கள் பொருத்தமற்றவை என்று தெரிவித்துள்ளார்.

பெர்சாத்துவில் இருந்தபோது அரசியலில் பல்வேறு வெகுமதிகளையும் வாய்ப்புகளையும் அனுபவித்ததைப் பற்றி ஃபைஸ் சிந்திக்க வேண்டும் என்று சிலாங்கூர் பெர்சாத்து துணைத் தலைவர் ரஃபிக் அப்துல்லா நினைவுறுத்தியுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *