DAP- யை விலகி இருக்குமாறு சொன்னேனா? - தெங்கு ரஸாலி மறுப்பு

top-news
FREE WEBSITE AD


பெட்டாலிங் ஜெயா, ஜூலை 27: அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கிளந்தானில் உள்ள நெங்கிரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இருந்து விலகி இருக்குமாறு டிஏபி-யை தாம் சொன்னதாக வெளியான தகவலை,  குவா முசாங் அம்னோ தலைவர் தெங்கு ரஸாலி ஹம்சா மறுத்துள்ளார்.

ஆகஸ்ட் 17 இடைத்தேர்தல் தொடர்பான
ஒரு விவாதத்தில், பாரிசான் நேஷனல் வேட்பாளர் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானிக்கு பிரச்சாரம் செய்ய டிஏபி தலைவர்களை அழைக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்ததாக அவர் விளக்கினார்.

அதற்கு இங்கு DAP தலைவர்கள்  வேண்டுமா? அவர்களில் பெரும்பாலானோர் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் மற்றும் நெங்கிரி தொகுதி  100% மலாய் தொகுதி என்று மட்டுமே தாம் கூறியதாக அவர் கூறினார்.

மேலும், அந்த இடைத்தேர்தலுக்கு சிலரை வரவிடாமல் தடுப்பீர்களா என்று கேட்கப்பட்டதாகவும் அதற்கு தாம் அது
தேவையில்லை என்று சொன்னதாகவும் ரஸாலி கூறினார்.

மக்கள் நெங்கிரி அல்லது எங்கு வேண்டுமானாலும்  பிரச்சாரத்திற்குச் செல்வதைத் தடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று அவர் கூறினார்.

  DAP அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன் என்று மட்டும்தான் சொன்னேன். செல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை என FMT-க்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறினார்.

வியாழன் அன்று, தெங்கு ரஸாலி இடைத்தேர்தலில் இருந்து விலகி இருக்குமாறு டிஏபியை வற்புறுத்தியதாக
செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது!

Did I tell DAP to stay away?
 - Refusal of Tengu Razali

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *