GISBH உயர் மட்டத் தலைவர்களின் மனைவி, குழந்தைகளுக்கு காவல் நீட்டிப்பு!
- Shan Siva
- 01 Oct, 2024
கோலாலம்பூர், அக் 1: கட்டாய உழைப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் உதவ குளோபல் இக்வான் சர்வீசஸ் மற்றும் பிசினஸ் ஹோல்டிங்ஸ் (ஜிஐஎஸ்பிஹெச்) உயர் நிர்வாத்தினர் உட்பட மொத்தம் 24 பேர் மீண்டும் ஐந்து நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
24 பேரில் உயர்மட்ட GISBH நபரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் அடங்குவர் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் கூறினார்.
செராஸில் பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீண்டும் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.
தான் சுரண்டப்பட்டதாகவும், நிறுவனத்தில் பணிபுரியும் போது சம்பளம் பெறவில்லை என்றும் அவர் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
14 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறப்படும் பாதிக்கப்பட்டவர்கள் சரவாக்கின் மீரியில் இருப்பதாக ரஸாருதீன் கூறினார்.
GISBH உறுப்பினர்களுக்கு எதிராக 2013 மற்றும் 2024 க்கு இடையில் கட்டாய உழைப்பைப் பயன்படுத்தியதாக காவல்துறை அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் நலன்புரி இல்லங்கள் மற்றும் GISBH உறுப்பினர்களின் வீடுகளில் இருந்து 572 குழந்தைகள் மீட்கப்பட்ட பின்னர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாகவும் நிறுவனம் விசாரிக்கப்படுகிறது.
இதுவரை மொத்தம் 359 GISBH உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *