லாக் அப் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு!

top-news
FREE WEBSITE AD

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.இந்த சம்பவத்திற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்த சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு வழக்கானது மாற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மரணமடைந்தவர்கள் குடும்பத்தினரை விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அண்மையில் மரணமடைந்த கோவில் பாதுகாவலர் அஜித்குமார் வீட்டிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவி வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் காவல் துறை விசாரணையில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேற்று (12-07-25) தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.

இன்று (13-07-25) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு அக்கட்சி போராட்டம் நடத்த உள்ள நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் காவல் துறை விசாரணையில் இறந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேற்று சந்தித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *