மலேசியாவில் பெருகும் பாலியல் தொழில்! – குடிநுழைவுத் துறை அதிரடி!

top-news
FREE WEBSITE AD

சமீபமாக மலேசியாவின் முக்கியப் பட்டணங்களில் வெளிநாட்டுப் பெண்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பது மட்டுமின்றி பாலியல் தொழிலில் ஈடுபடுவது பெருகி வருவதாகத் தேசியக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் DATO RUSLIN JUSOH  தெரிவித்தார். 

கடந்த 2 நாள்களாக SEREMBAN, SERI  KEMBANGAN, KANGAR, JOHOR ஆகிய பகுதிகளில் நடத்திய சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 117 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசியக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் DATO RUSLIN JUSOH  தெரிவித்தார்.

நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் மூலம் VIETNAM, BANGLADESH, INDONESIA போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 27 வெளிநாட்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.  கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் அனைவரும் 15 முதல் 53 வயதுக்குற்பட்டவர்கள் என தேசியக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் DATO RUSLIN JUSOH  தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *