விபத்துக்குள்ளான 6 வாகனங்கள்! குழந்தை உட்பட 9 பேர் காயம்!

top-news

மே 29,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தையும் இளம்பெண்ணும் காயமடைந்த நிலையில் 9 பேர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பினர். இன்று நண்பகல் 12.38 மணிக்கு வடக்கு தெற்கு செடுஞ்சாலையின் NIBONG TEBAL அருகில் இந்த விபத்து ஏற்பட்டதாக அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடதிற்கு மீட்புப் படையினருடன் விரைந்ததாகப் பினாங்கு மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் John Sagun Francis தெரிவித்தார்.

விபத்தில் சம்மந்தப்பட்ட 6 வாகனங்களில் 3 வாகனங்கள் சம்பவ இடத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் Perodua Axia, Mazda 3, Honda City ஆகிய 3 வாகனங்களிலிருந்த 9 பேர் சிராய்ப்புக் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பினாங்கு மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் John Sagun Francis தெரிவித்தார். இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல் துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enam kenderaan terlibat dalam kemalangan di Lebuhraya Utara-Selatan berhampiran Nibong Tebal pada 29 Mei. Sembilan mangsa, termasuk seorang kanak-kanak dan seorang wanita muda, mengalami kecederaan ringan. Tiada kematian dilaporkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *