சட்டவிரோதமாகச் செயல்படும் சட்டவிரோத மின்கழிவுப்பொருள் மறுசுழற்சி மையங்களில் சோதனை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 1-

மலேசியாவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட சட்டவிரோத மின்கழிவுப்பொருள் மறுசுழற்சி மையங்கள் உள்ளன. குறிப்பாக, சிலாங்கூரின் ரவாங், உலு சிலாங்கூர் பகுதிகளில் பல மறுசுழற்சி மையங்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளன. சட்டவிரோதமாகச் செயல்படும் அத்தகைய மறுசுழற்சி மையங்கள் சுற்றுச்சூழலின் தூய்மையையும் பாதுகாப்பு விதிமுறைகளையும் பொருட்படுத்துவதில்லை.

இந்த மையங்களில் ரசாயனம் கொண்ட பொருட்கள் பொதுவெளியில் எரிக்கப்படுகின்றன. அதிலிருந்து காரீயம், பாதரசம், காட்மியம் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் காற்றில் கலக்கின்றன. இது காற்றை மட்டும் அல்லாது மண், நீர் போன்றவற்றையும் மாசுபடுத்துகிறது என்று கேடிஇபி கழிவுப்பொருள் மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முகமது தாஹிர் குறிப்பிட்டார்.

அண்மையில் கிள்ளானின் பண்டமாரானில் சட்டவிரோத மின்கழிவுப்பொருட்களை மறுபதனீடு செய்யும் ஆறு ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அச்சோதனையில் நான்கு கோடியே இருபது லட்சம் வெள்ளி மதிப்புடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 2,800 கிலோ எஃகு, 83,700 கிலோ அலுமினியம், 6,000 கிலோ இரும்பு போன்றவையும் அதில் அடங்கும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *