MYDIN தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி!

top-news

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு மைடின் பேரங்காடியின் ஏற்பாட்டில் நடைபெற்ற'பிரகாசமான தீபாவளி கொண்டாட்டம்'நிகழ்வை தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
பல இனங்களுக்கிடையிலான ஒற்றுமை கலாச்சாரம் வலுபெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இது போன்று கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என செனட்டர் சரஸ்வதி தமது உரையில் கூறினார்.
இன பேதமின்றி மைடின் பேரங்கடி சமூகத்துடன் அணுக்கமான தொடர்பை ஏற்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 
எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும், அந்த கொண்டாட்டத்திற்கு மைடின் பேரங்கடி முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் சொன்னார். 
மொத்த மற்றும் சிறிய விற்பனை பேரங்காடி குழுமமான மைடின் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
இதற்கு ஏற்ப அனைத்து கொண்டாட்டங்களுக்கும் மைடின் பேரங்கடி முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மைடின் பேரங்கடி நடத்தி வரும் இது போன்று சமூக நலன் நிகழ்ச்சிகளுக்கு தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். 
இன்றைய இந்த கொண்டாட்டத்தில் 50 குடும்பங்களுக்கு மைடின் பேரங்காடியின் ஏற்பாட்டில் உணவுக் கூடைகள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார். 
எதிர்வரும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராக இந்த குடும்பங்களுக்கு உணவு கூடைகள் சற்று உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 இந்த கொண்டாட்டத்தில் மைடின் பேரங்காடியின் உரிமையாளர் டத்தோ அலி ஹாமிர் மைடின் உட்பட பலர் கலந்து கொண்டனர்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *