நஜீப் வழக்கில் கேட்கும் கேள்விக்கு அரசாங்கம் மெளனம்! – வழக்கறிஞர் ஆவேசம்!

top-news

மே 29,

முன்னாள் பிரதமர் நஜீப் மீதான வழக்கு தொடர்பான கூடுதல் சாட்சிய ஆவணங்கள் குறித்து அரசு தரப்பு எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் அமைதியாகவே இருப்பதாக நஜீப்பின் தலைமை வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah குற்றம்சாட்டினார். நஜீப் தரப்பு வழக்கறிஞர்கள் இதுவரையில் 7 கடிதங்களை அனுப்பியிருக்கும் நிலையில் எந்த கடிதத்திற்கும் பதில் அளிக்காமல் இந்த அரசாங்கம் மெளனமாக இருப்பதால் நஜீப்பின் வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகராமல் முடங்கியிருப்பதாக அவர் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

நஜீப்பின் வழக்கறிஞர்கள் உள்துறை அமைச்சிற்கும் அட்டர்னி ஜெனரலாக இருந்த Tan Sri Ahmad Terrirudin Mohd Salleh, சிறைச்சாலை தலைமை இயக்குநருக்கும் இந்த கடிதங்களை அனுப்பியிருக்கிறது, ஆனால் யாரோ சொல்லி வைத்தாற் போல இவர்கள் அனைவரும் எந்தவொரு பதிலும் தெரிவிக்காமல், கடிதத்தைப் பெற்றதாகக் கூட எந்தவொரு பதிலையும் வழங்கமால் மெத்தனமாக இருப்பதாக நஜீப்பின் தலைமை வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah குற்றம்சாட்டினார். இவர்கள் காலத்தை கடத்தும் ஒவ்வொரு நொடியும் நஜீப் சிறையில் அவதியுற்று வருவதாக Tan Sri Muhammad Shafee Abdullah வருத்தம் தெரிவித்தார்.

Tan Sri Muhammad Shafee Abdullah, ketua peguam bagi kes najib razak mendakwa kerajaan berdiam diri terhadap tujuh surat yang dihantar berkenaan dokumen tambahan dalam kes Najib. Beliau menegaskan sikap membisu itu menjejaskan proses perbicaraan dan menzalimi anak guamnya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *