மீண்டும் தமிழகம் வருகிறார் இந்திய பிரதமர் மோடி!

top-news
FREE WEBSITE AD

தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு, வரும் 27, 28-ம் தேதிகளில் இந்திய பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கி விட்டது. திமுக '200 தொகுதிகளில் வெல்வோம்' என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து, தேர்தல் பணியை துவங்கி உள்ளார்.

இதேபோல் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதிவாரியாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் விஜய்யின் அறிவிப்பு, சீமானின் தனித்து போட்டி என்ற விடாப்படி கொள்கை ஆகியவற்றால் 4 முனை போட்டி நிலவுவது உறுதியாகி இருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு, வரும் 27, 28-ம் தேதிகளில் இந்திய பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் வரும் அவர் அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் அங்கு பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் முகாமிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளதாக தகவல்.வெளியாகி உள்ளது.கடந்த ஆண்டு 7 முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *