ஒன்றாக இணைந்து, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம்!- பாகிஸ்தான் பிரதமர் கருத்து
- Shan Siva
- 03 Oct, 2024
இஸ்லமாபாத், அக் 3: பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும், நீண்ட 67 ஆண்டுகால நட்பை ஆழப்படுத்தவும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ்
ஷெரீப் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவுடன் நேற்று
பாகிஸ்தானுக்கு மூன்று நாள் பயணமாக அன்வார் வந்தடைந்தார். வர்த்தகம், இணைப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு
உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பரந்த அளவிலான நிகழ்ச்சி நிரல் குறித்து அன்வார்
விவாதித்தார்.
இதனிடயே விவசாயம், ஹலால் தொழில், சுற்றுலா, கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகள், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்த பயனுள்ள விவாதங்களை எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றாக இணைந்து, பாகிஸ்தானுக்கும் மலேசியாவுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என்று
ஷெஹ்பாஸ் பதிவிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *