சபாவில் உலகின் அரிதான பூ!

top-news
FREE WEBSITE AD

 கோத்த கினபாலு, செப் 30: உலகின் மிகப்பெரிய பூவாகவும், அரிதான ஒன்றாகவும் இருக்கும் ரஃப்லேசியா பல புதிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று சபா வனத்துறை தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஹார்ட் ஆஃப் போர்னியோ (HoB) அறிவியல் பயணத்தின் போது சபாவில் உள்ள புக்கிட் மோன்கோபோ மற்றும் புக்கிட் மென்டாபோக் வனப் பகுதியில் இந்த உள்ளூர் இனம்-ராஃப்லேசியா தெங்கு-அட்லினி கண்டறியப்பட்டது என்று தலைமை வனப் பாதுகாவலர் டத்தோ ஃபிரடெரிக் குகன் கூறினார்.

சபாவில் காணப்படும் மூன்று ராஃப்லேசியா வகைகளில் இந்த இனம் மிகவும் அரிதானது என்று அவர் கூறினார்.

முன்னதாக, இது மாநிலத்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளான Trus Madi Range மலைத்தொடர் மற்றும் மாலியாவ் பேசின் பாதுகாப்புப் பகுதியில் மட்டுமே காணப்பட்டது என்று அவர் கூறினார்.

சபாவின் முதன்மையான பாதுகாவலர்களில் ஒருவரான Datuk Dr Tengku D. Z. Adlin என்பவரின் நினைவாக Rafflesia Tengku-adlinii பெயரிடப்பட்டது என்று அவர் கூறினார். 1987 ஆம் ஆண்டு ட்ரஸ் மாடி மலைத்தொடரில் மறைந்த பேராசிரியர் கமருடின் மாட் சாலே என்பவரால் இந்த மலர் கண்டுபிடிக்கப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *