மோட்டார் சைக்கிள் விபத்தில் படிவம் 5 மாணவன் பலி!

top-news

மே 30,

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரில் வந்த லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிற்பகல் 2.15 மணிக்கு கோலா சிலாங்கூரில் உள்ள Parit Mahang சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி இடைநிலைப்பள்ளியில் படிவம் 5 பயிலும் மாணவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Kuala Selangor மாவட்டக் காவல் ஆணையர் Azaharudin Tajudin தெரிவித்தார்.

முன்னே சென்றுக் கொண்டிருந்த வாகனத்தை முந்தும் போது எதிரில் வந்த லாரியை மோட்டார் சைக்கிள் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தின் விசாரணைக்காக 26 வயது லாரி ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் விபத்தில் உயிரிழந்த 17 வயது இடைநிலைப்பள்ளி மாணவனின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக Tanjong Karang மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் Kuala Selangor மாவட்டக் காவல் ஆணையர் Azaharudin Tajudin தெரிவித்தார்.

Seorang pelajar tingkatan 5 berusia 17 tahun maut dalam kemalangan motosikal di Parit Mahang, Selangor. Motosikalnya melanggar lori yang datang dari arah bertentangan ketika memotong kenderaan lain. Pemandu lori berusia 26 tahun ditahan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *