அம்னோவைக் குறை சொன்னவர்களே இப்போது ஊழல் செய்துள்ளார்கள்! - Akmal Saleh

- Sangeetha K Loganathan
- 18 Apr, 2025
ஏப்ரல் 18,
பி.கே.ஆர் கட்சியின் தொகுதித் தலைவர்களுக்கானத் தேர்தலில் வாக்குக்குப் பணம் கொடுக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்திகள் உண்மையாக இருந்தால் அம்னோவைக் குறை சொன்ன வாய்கள் தான் இப்போது ஊழல் செய்திருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Akmal Saleh தெரிவித்துள்ளார். உங்கள் மீது இருக்கும் அழுக்குகளைக் கழுவி விட்டு மற்றவர்களின் சுத்தத்தைப் பற்றி பேசுங்கள் என Datuk Dr Akmal Saleh தெரிவித்துள்ளார்.
கட்சித் தேர்தலின் போது கோலாலம்பூரில் உள்ள பி.கே.ஆர் உறுப்பினருக்குப் பணம் கொடுக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து வெளிப்படையாக லஞ்சத்தைக் கொடுத்துவிட்டு அம்னோவை லஞ்சத்தை ஊறிய கட்சி என வசைப்பாடுவதெல்லாம் கேவலமானச் செயல் என Datuk Dr Akmal Saleh சாடினார்.
Datuk Dr Akmal Saleh menyelar pihak yang sebelum ini mengkritik UMNO tetapi kini terlibat dalam rasuah, merujuk kepada dakwaan sogokan wang dalam pemilihan PKR. Beliau menggesa agar mereka membersihkan diri sebelum menuduh pihak lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *