RM819,000 மதிப்பிலானப் போதைப்பொருள் பறிமுதல்!

top-news

மே 30,

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டு வந்ததாக நம்பப்படும் போதைப்பொருளை எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். RANTAU PANJANG பகுதியில் வழக்கமான ரோந்து பணியிலிருந்த அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய வாகனத்தைப் பிந்தொடர்ந்ததாகவும் சம்மந்தப்பட்ட வாகனத்தை நிறுத்தி ஆடவர் ஒருவர் தப்பிய நிலையில் வாகனத்திலிருந்து 22.5 கிலோ எடையிலான ganja வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படை PGA இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab Hamid தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய Proton Wira வாகனத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் RM819,000 என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் வாகனத்தின் பதிவு எண்களைக் கொண்டு உரிமையாளரைத் தேடி வருவதாகவும் PGA இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab Hamid தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட RM819,000 மதிப்பிலான 22.5 கிலோ ganja தாய்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

PGA merampas 22.5kg ganja bernilai RM819,000 dari sebuah Proton Wira di Rantau Panjang. Seorang lelaki melarikan diri semasa pemeriksaan. Ganja dipercayai diseludup dari Thailand. Pihak berkuasa sedang mengesan pemilik kenderaan tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *